News December 23, 2025
ஜனநாயகனுக்காக வெயிட்டிங்: அருண் விஜய்

சக நடிகன் என்ற முறையில் ‘ஜனநாயகன்’, விஜய்யின் கடைசி படம் என்பதால் தனக்குமே கஷ்டமாகத்தான் உள்ளது என அருண் விஜய் தெரிவித்துள்ளார். என்றைக்கும் விஜய்க்கு நமது ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், ஜனநாயகன் படத்தை பார்க்க வெயிட்டிங் என்றும் விஜய் ஸ்டைலில் தனது விருப்பத்தை கூறியுள்ளார். விஜய்யின் கடைசிப் படத்தால் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 31, 2025
எவ்வளவு குடிச்சா போலீஸ்கிட்ட மாட்டாம தப்பிக்கலாம்?

ஒரு பீர் அடிச்சா போலீஸ் பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் நபரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, உங்க உடம்புல கொஞ்சமா ஆல்கஹால் கலந்தாலும் போலீஸ் சோதனையில்(Alcohol reading metre) நிச்சயம் தெரிந்துவிடும். போலீஸ் வைத்துள்ள மெஷினில் 35 புள்ளிகள் காட்டினால் நீங்கள் மது அருந்தியவர் என்பதை அவர்கள் உறுதி செய்துவிடுவர். எனவே மது ஒரு சொட்டு குடித்தாலும் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதே சிறந்தது..
News December 31, 2025
ஒருவருக்கு ₹13.48 கோடி சம்பளம் வழங்கும் OpenAI!

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.
News December 31, 2025
TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: அமித்ஷாவுக்கு நயினார் கடிதம்

திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், சமீப நாள்களாக அது மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷாவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.


