News January 10, 2026
ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த காங்., MP

தேர்தல் காலத்தில் ED, CBI, IT போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என EPS கூறியிருப்பது திவால்தனத்தின் ஒப்புதலா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுக தனித்த அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறிய அவர், இன்று அது அமித்ஷாவின் அதிமுக இயந்திரத்தின் துணை அலுவலகமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

வந்தவாசியில் தவெக கிழக்கு மா.செ., உதயகுமார் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மா.செ., உள்பட 50 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.
News February 12, 2026
BREAKING: இன்று பந்த்.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சற்றுநேரத்தில் தொடங்குகிறது. இதனால், முக்கிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பஸ்கள் ஓடுமா? பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்க கூடாது; இன்று அளிக்கப்பட்ட விடுப்புகள், வார விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
News February 12, 2026
DMK மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: தமிழிசை

திமுகவின் வெற்றி குறித்து காங்., நம்பிக்கையுடன் இருந்தால், இடையில் விஜய் பக்கம் சாய்ந்தது ஏன் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பாக இல்லை; போதைப்பொருள் மாஃபியா தலைவிரித்தாடுகிறது. இதனால், திமுக ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சாடினார். மேலும், திமுக மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை எனக்கூறிய அவர் 2026-ல் NDA ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


