News March 26, 2025
ஜடேரி நாமக்கட்டி – தி.மலையின் பாரம்பரிய அடையாளம்

நெற்றியில் இடுவதற்குப் பயன்படுத்தப்படும் நாமக்கட்டியைத் தயாரிப்பதில் ஜடேரி கிராமம் புகழ்பெற்றது. இந்த நாமக்கட்டி திருவண்ணாமலையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகும். இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி கோயில் உட்பட பல்வேறு வைணவத் திருத்தலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இது புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்த தொழிலை நம்பி 150 குடும்பங்கள் உள்ளது. தி.மலையின் பெருமையை ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 5, 2025
மன தையிரியம் கிடைக்க செய்யும் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. மன தைரியம் கிடைக்க, சனி தோஷங்கள் நீங்க, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, திருமண தடை நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
News April 5, 2025
தி.மலை கோயில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கோயிலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்ததாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News April 5, 2025
திருவண்ணாமலை: குவாரிகளுக்கு புதிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமம் கோரி இனி வரும் காலங்களில் விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெறப்படாது. அரசு வழிகாட்டுதலின்படி, 2025-26 நிதியாண்டில் ஏப்ரல் 7 முதல் விண்ணப்பங்கள் https://mimas.tn.gov.in இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.