News November 11, 2025
ஜடேஜாவுக்கும் RR அணிக்கும் தொடரும் 15 ஆண்டுகால பகை!

2008-ல் RR அணி கண்டுபிடித்த வீரர்தான் ஜடேஜா. ஆனால், 2010-ல் அவர் வேறு அணிக்கு மாற முயற்சி எடுத்துள்ளார். இதுகுறித்து RR அணி, BCCI-யிடம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தது. இதனால் ஜடேஜாவுக்கு 2010 IPL-ல் விளையாட BCCI தடை விதித்திருந்தது. இது நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதன் காரணமாக, ஜடேஜா RR அணியில் இணையமாட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
நடிகர் தர்மேந்திரா மறைவா? மகள் மறுப்பு

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா(89) உயிரிழந்ததாக India Today உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், தர்மேந்திரா உயிரிழக்கவில்லை என்று அவரது மகள் ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறியுள்ள அவர், தர்மேந்திரா குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 11, 2025
ஹஜ் யாத்திரைக்கு இந்தியா புதிய ஒப்பந்தம்!

அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அந்நாட்டு அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியை ஜெட்டாவில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், அடுத்தாண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News November 11, 2025
12th பாஸ் போதும்.. ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு 20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <


