News March 21, 2024
சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

2024 மக்களவைத் தேர்தல், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோழவந்தான், உசிலம்பட்டி ஆகியவை தேனி மக்களவைத் தொகுதி.
Similar News
News November 5, 2025
மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.