News January 12, 2025
சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் பேட்டி

சோழவந்தானில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் திட்டம் நடைபெறுகிறது. ஆனால் இதுவரை உள்ளூர் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வரவில்லை” என்று மக்கள் புகார் அளித்து வருகிறார்கள் என கூறினார்.
Similar News
News December 11, 2025
மதுரை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

மதுரை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 11, 2025
தமிழக ஆளுநர் நாளை மதுரை வருகை

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழா நாளை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.


