News April 8, 2025

சோழன் பிறந்த திருக்கோவிலூர்

image

சோழ தேச பெருமையை நிலைநாட்டிய ராஜ ராஜா சோழனை பெற்ற பெருமை கொண்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் தான் சோழனின் தாயார் வானவன் மாதேவி பிறந்த ஊர். வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடந்தது பற்றியும்,ராஜ ராஜ சோழன் இங்கு பிறந்தது பற்றியும் திருக்கோவிலூர் வீரட்டானேசுஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. சோழத்திற்கு பெருமை சேர்க்கும் நம்ம ஊரு பெருமையை மற்றவர்களுக்கும் பகிருங்கள்

Similar News

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

கள்ளக்குறிச்சியில், 285 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். 

News April 17, 2025

போலி துனை வட்டாட்சியர் முத்திரை; ஒருவர் கைது

image

சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!