News March 25, 2024
சோலைமலை முருகன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மேலவளவு வடக்கு காலனியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(44). மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மனைவி ஜெயபாரதி(35)யுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சத்தியமூர்த்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 6, 2026
கோரிப்பாளையம் பாலம் பிப்.20-ல் திறப்பா.?

மதுரை கோரிப்பாளையம் பாலத்தை பிப்.20 ல் முதல்வர் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இப்பால பணிகளை 2023 செப். 30ல் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமுக்கம் நெல்பேட்டை வரை 2.2 கி.மீ. செல்லுார் பாலம் 800 மீ என 3 கி.மீ கட்டுமான பணிகள் நடந்தன. அமெரிக்கன் கல்லூரி தொடர்ந்த வழக்கால் 6 மாதம் தொய்வு ஏற்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடக்கிறது. பிப்.20ல் திறக்க வாய்ப்புள்ளது.
News February 6, 2026
மதுரை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


