News October 26, 2024

சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

image

அழகர்கோவில் மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா நவ.2 முதல் நவ. 8 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல், யாகசால பூஜைகளுடன் விழா தொடங்கும். அன்று அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதே போல் 7 நாட்களும் விழா நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Similar News

News February 4, 2026

மதுரை; மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

image

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவு 47 கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா 40 இந்நிலையில் அறிவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்துள்ளார். மது பழக்கத்தை கணவர் நிறுத்தாததால் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார், இதனால் மனமுடைந்த அறிவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 4, 2026

மனைவி கண் முன்னே வேன் மோதி கணவன் பலி

image

மதுரை கல்­லணையை சேர்ந்­த­வர் பூமிநா­தன்(67) மனைவி சங்கீதாவு­டன் பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்­தார். கோட்­டைமேடு ராம­சாமி பாலம்
அருகே சென்­ற­ போது
வாடிப்­பட்டி தனிச்சியத்தை சேர்ந்த மாரிமுத்து(43)
ஓட்டிச் சென்ற வேன் அவர்­கள் மீது மோதியது. இதில் இருவரும் தவறி கீழே விழுந்­த­தில் கண­வர்
சம்­பவ இடத்தி­லேயே உயி­ரிழந்­தார் .
அலங்­கா­நல்லூர்
போலீ­சார் விசா­ரணை
நடத்தி வருகின்­ற­னர்.

News February 4, 2026

மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் செய்து <<>>பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!