News April 8, 2025

சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப்.21 முதல் 6 நாட்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல், பழுதுநீக்குதல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 16, 2025

வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

image

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தேனி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 16, 2025

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

image

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

error: Content is protected !!