News February 24, 2026

சோர்வா இருக்கா? 75 வயசு ரஜினியை பாருங்க: RJ பாலாஜி

image

இன்றைய தலைமுறையினர் சிறிய தோல்விக்கே வருந்தும் நிலையில், 75 வயதான ரஜினியை குறிப்பிட்டு RJ பாலாஜி பேசியது வைரலாகி வருகிறது. தன்னிடம் உதவி இயக்குநர்களாக இருக்கும் 22, 23 வயது இளைஞர்கள், ஈஸியாக சோர்வடைகிறார்கள் என்று கூறிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன படங்கள் செய்ய வேண்டும் ரஜினி தன்னிடம் பகிர்ந்ததாகவும், 50 வருடமாக சலிப்படையாமல் அவர் பணியாற்றும்போது, அனைவராலும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

நாளை பேச்சுவார்த்தை இல்லை: நயினார்

image

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகே NDA-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரவில்லை எனவும், EPS உடன் கலந்து பேசிவிட்டு பேச்சுவார்த்தைக்கான நாளை பாஜக முடிவு செய்யும் என்றும் கூறினார். கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.

News February 26, 2026

வெற்றியல்ல.. மாபெரும் வெற்றி தேவை!

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய மேட்சில், இந்தியாவிற்கு வெற்றி அல்ல, மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அதாவது முதலில் இந்தியா பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால், 181 ரன்களை ஜிம்பாப்வே அடித்தாலும், அதை 12.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும். சோதனையை வென்று முன்னேறுமா இந்தியா?

News February 26, 2026

சம்பளம் மேலும் ₹5,000 உயர்ந்தது.. அமைச்சர் அறிவிப்பு

image

கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை மேலும் ₹5,000 உயர்த்தி அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதன்படி, கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ₹25,000 – ₹30,000 ஆகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ₹20,000 – ₹25,000 ஆகவும் ஊதியம் உயர்ந்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மார்ச் 1 முதல் அமலாகிறது. இதன் மூலம் 9,646 விரிவுரையாளர்கள் பயனடைவர்.

error: Content is protected !!