News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
Similar News
News January 23, 2026
அலியாளம் அணைக்கட்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அஞ்செட்டி பகுதியில் உள்ள அலியாளம் அணைக்கட்டில் இருந்து 8 கிமி தூரம் வழுக்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் வரும் உபரி நீரை சூளகிரி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் ஜன-23 ஆய்வு செய்தார். இந்த திட்டம் மூலம் 12 ஏரிகள் நீர்பாசன வசதியை பெறவும் தர்மபுரி மாவட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
News January 23, 2026
கிருஷ்ணகிரி: சொந்த தொழில் தொடங்கணுமா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.m<
News January 23, 2026
கிருஷ்ணகிரியில் பரிதாப பலி!

கங்கசந்திரத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்கச் சென்ற லட்சுமி நாராயணன் (56) என்ற தொழிலாளி, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். ஏற்கெனவே கடந்த 17-ஆம் தேதி காவேரிப்பட்டணம் அருகே இளவரசன் என்பவர் இதேபோல் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது பலியாக லட்சுமி நாராயணன் மரணமடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


