News April 2, 2025
சோடியம் நைட்ரேட் ஊசி செலுத்தி மாணவர் உயிரிழப்பு

கொடுங்கையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பால் யூட்டி கிளாஸ்(20), செல்போனுக்கு அடிமையான இவர் மன அழுத்தத்தில் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சோடியம் நைட்ரேட் ஊசியை தனக்கு தானே செலுத்தி மயக்கமடைந்துள்ளார். பதறிபோன பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்க வேண்டிய வயதில் இவ்வாறு நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 17, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 16) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 17, எழும்பூர் – 19.9, கிண்டி – 9.6, மாம்பலம் – 34.8, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 32.3, புரசைவாக்கம் – 26.4, தண்டையார்பேட்டை – 23.4, ஆலந்தூர் 1.2, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 6.7 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு..?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று(செப்.17)ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும், டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது காலை 6.00 மணிக்கு அமலில் வந்தது.
News September 17, 2025
சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <