News December 27, 2024
சொல் வீரன் அல்ல; செயல் வீரர்

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்ற பிரதமர்களை போல் நிறைய பேசி நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர் வார்த்தைகளால் பேசக்கூடியவர் அல்ல. செயல் வீரர். 1991 முதல் 1996 வரை நாட்டின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதம் 10.2% இருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 16, 2025
பா.ரஞ்சித்தின் 13 ஆண்டுகால பயணம்

இயக்குநர், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2012 ஆக., 15-ம் தேதி ‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார். அவரது படங்களில் சாதாரண மக்களின் காதலையும், கஷ்டங்களையும் இயல்பான திரைமொழியில் வெளிப்படுத்தியவர். ‘அட்டகத்தி’,
‘மெட்ராஸ்’, ‘சார்பட்டா பரம்பரை’ என ட்ரெண்ட் செட்டிங் படங்களை கொடுத்தவர். அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வர உள்ளது. ஆகவே, முந்தைய வாரத்தின் சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த வகையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதால், சொந்த ஊர் செல்வோர் பயன்படுத்தி கொள்ளவும். அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய், 19-ம் தேதிக்கு புதன், 20-ம் தேதிக்கு வியாழன் காலை 8 மணிக்கு தொடங்கும்.