News December 31, 2025
சொல்லாம போயிட்டீயே அப்பா… கதறும் புகழ்

தன்னுடைய தந்தை உயிரிழந்த செய்தியை பிரபல நகைச்சுவை நடிகர் விஜய் டிவி புகழ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அப்பா என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டீயே.. தெய்வமே இப்படி சொல்லாம போயிட்டீயே என தனது மன ஆற்றாமையை கொட்டியுள்ளார். KPY, CWC உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ், தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தையை இழந்த புகழுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
ஜாமின் இல்லை: சிறைவாசத்தை உறுதி செய்த SC

கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ல் நடந்த CAA போராட்டத்தில் வெடித்த கலவர வழக்கில் JNU மாணவர் உமர் காலித் உட்பட 7 பேர் கைதாகினர். அவர்களில் 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் FIR பதியப்பட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகளாக 7 பேரும் ஜாமீனுக்கு போராடி வந்த நிலையில், காலித்-ஷர்ஜில் தவிர 5 பேருக்கு SC ஜாமின் வழங்கியுள்ளது.
News January 5, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 5, 2026
தேர்தல் கூட்டணி: முடிவை மாற்றினார் பிரேமலதா

ஜன.9-ம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா கூறியிருந்த நிலையில், தனது முடிவை மாற்றியுள்ளார். இன்று மா.செ.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ளது. இதன்பின் பேசிய பிரேமலதா, பொங்கலுக்கு பிறகுதான், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதாகவும், தேர்தலுக்குள் கூட்டணிகளில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சூசகமாக கூறினார்.


