News July 5, 2025

சொர்ணவாரி பட்ட காப்பீடு குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார். SHARE IT

Similar News

News July 5, 2025

புதுச்சேரி-திருச்செந்தூர் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மைத் துறை சார்பில் நேற்று (ஜூலை 4) முதல் திருச்செந்தூருக்கு தொடர்ச்சியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

News July 5, 2025

புதுச்சேரி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

புதுவையில் பெண் தூய்மை பணியாளர் தற்கொலை

image

புதுவை, சூரமங்கலம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால், இரவு நேரத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!