News March 16, 2025
சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News September 13, 2025
கோவையில் தூக்கி வீசப்பட்டு பலி!

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 70). இவர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த டூவீலர் மோதி உயிரிழந்தார். இதே போல் துடியலூர் அருகே உள்ள அம்பிகா நகரை சேர்ந்த சண்முகம் (வயது 75) என்பவர் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 13, 2025
கோவை: SMS மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

கோவை மாவட்ட காவல்துறை முகநூல் மூலம் போலி SMS மோசடி குறித்து எச்சரிக்கை புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் SBI, SMS-ல் இணைப்புகள் அனுப்பாது. போலி இணைப்புகளை கிளிக் செய்ய தவிர்க்கவும். மேலும் மோசடி புகாருக்கு 1930 சைபர் கிரைம் மற்றும் 18001234/18002100 ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
News September 13, 2025
கோவை: நெல்லிக்காயை பணமாக்கும் பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி (16.09.2025 மற்றும் 17.09.2025) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதில் நெல்லி பானங்கள், தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி கற்பிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.