News April 6, 2025

சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் 2025-26-ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொகையினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2025

நாமக்கல் அங்கன்வாடியில் 127 காலிப்பணியிடம்

image

நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு 23.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE பண்ணுங்க)

News April 7, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலையை 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை தொடர முடிவு செய்யப்பட்டது .

News April 6, 2025

நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

error: Content is protected !!