News January 27, 2026
சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சரின் மனு தள்ளுபடி

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வருமானத்துக்கு அதிகமாக ₹2.35 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இதனிடையே, ED-யும் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக விளக்கமளிக்க ஐ.பெரியசாமி & அவரது குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை SC தள்ளுபடி செய்துள்ளது.
Similar News
News January 27, 2026
ராமதாஸ் உடன் கூட்டணி? செங்கோட்டையன் அறிவித்தார்

தவெகவுடன் <<18971399>>ராமதாஸ்<<>> தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘நல்லது நடக்கட்டும்’ என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஆனால், CM வேட்பாளராக விஜய்யை மூத்த அரசியல்வாதியான ராமதாஸ் ஏற்பது கேள்விக்குறி தான் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை கூட்டணி அமைத்து, விஜய்யை கூட்டணி தலைவராக ராமதாஸ் அறிவித்தால், அது விஜய்க்கு பெருமையை ஏற்படுத்தும் என்கின்றனர்.
News January 27, 2026
பிப்ரவரியில் திமுகவின் மெகா பிளான்

‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சியின் 20 நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு பிப்ரவரி முழுவதும் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள மா.செ.,க்கள், பொறுப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பல்துறையை சார்ந்தவர்களிடம் திமுக சாதனைகளை கலந்துரையாடவும் கூறியுள்ளார்.
News January 27, 2026
பனி போர்வையில் கொண்ட ஹனுமன் கோயில்! VIRAL

USA-வில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்தான், சோஷியல் மீடியாவில் கோயிலின் போட்டோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தின் டாலஸ் நகரில் அமைந்துள்ள காரியசித்தி ஹனுமன் கோயில் வெண் பனி போர்வையை போர்த்தி கொண்டது போல காட்சியளிக்கிறது. நீங்க மட்டும் ரசிக்காம, நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


