News July 6, 2025
சைபர் மோசடி குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுரை

சென்னை பெருநகர காவல் துறை சைபர் மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடியில் சிக்கினால், உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும். மேலும், 1930 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். போலி இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாறாமல் இருக்க, அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தை (044-25268323, 044-22500900, 044-22500911) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961941>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
ஏர்போர்ட்டில் பரவி வரும் மர்ம காய்ச்சல்

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் போலீசார் சிலருக்கு திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. சளி, இருமல், உடலில் அதிக வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது, கொரோனா பரவல் மற்றும் கேரளாவில் பரவி வரும் நிபா காய்ச்சலாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு புகார்களும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உஷாரா இருங்க. ஷேர் பண்ணுங்க