News August 24, 2024
சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்

கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி என்பவரிடம் டிஜிட்டல் கைது என கூறி நூதன முறையில் டெல்லியை சேர்ந்த அபிஜித்சிங் என்பவர் ரூ.84,50,000 மோசடி செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட அபிஜித்சிங்கை கைது செய்து தேனி அழைத்து வந்தனர். தொடர் நடவடிக்கையாக அவர் மீது நேற்று (ஆக.23) குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News August 11, 2025
தேனி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <
News August 11, 2025
தேனியில் உணவு தங்குமிடதுடன் இலவச பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பிற்கான இலவச பயிற்சி ஆக.22 முதல் வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 11, 2025
தேனி: ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்

கூடலூரை சேர்ந்த தபேஸ் இவர் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஈட்டி எரியும் பயிற்சியில் மேற்கொண்டுள்ளார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்பிரசாத் என்ற 14 வயது சிறுவன் மீது ஈட்டி பாய்ந்து தலையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.