News December 19, 2025
சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு பேனர்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கிரீன் சர்க்கிள், சில்க்மில், பழைய பஸ் நிலையம், டோல் கேட், ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் அவசர எண் (1930), இணையதள முகவரி ஆகியவை உள்ளன.
Similar News
News December 22, 2025
வேலூர் எஸ்ஐ தேர்வு ; 1280 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத் தேர்வு, வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நேற்று(டிச.21) நடந்தது. இந்தத் தேர்வினை 4726 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,446 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்த 1,280 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 22, 2025
வேலூர் கலெக்டர் அறிவிப்பு!

சாதாரண விசைத்தறிகளை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நவீன மயமாக்க விருப்பமுள்ளவர்கள் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், 3ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகர் மேற்கு, காட்பாடி. வேலூர்-632006 (தொலைப்பேசி எண்-0416-2242647) என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
வேலூரில் இலவச தையல் பயிற்சி!

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்குப்8ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


