News August 2, 2024

சைக்கிள் பந்தையத்தில் வென்ற நீலகிரி மாணவன் 

image

உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் எஸ். ஹகமது. இவர் திருச்சியில் நடைபெற்ற 200 கி.மீ. தொலை தூர சைக்கிள் ஓட்டும் பந்தையத்தில் இரண்டாவதாக வெற்றி பெற்றார். இந்நிலையில் மாணவர் எஸ். ஹகமதுவை ஜே.எஸ்.எஸ். கல்லூரி முதல்வர் தனபால் வாழ்த்தி பாராட்டினார். அப்போது, நிர்வாக அலுவலர் பசுவண்ண தேவரூ , உடற்கல்வி  இயக்குநர் சிவபிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News

News November 7, 2025

நீலகிரியில் 2 பேர் அதிரடி கைது!

image

நீலகிரி: உதகை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய சானு, பானாசானு என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வட மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மேலும் உள்ள தொடர்புகள் மற்றும் கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 7, 2025

நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 7, 2025

நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!