News September 27, 2024

சைக்கிளில் மின்விளக்கு விளம்பரத்தை துவக்கம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சைக்கிளில் மின்விளக்கு விளம்பர பதாகை அமைத்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்து துவங்கி வைத்தார். சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இசிஆர்.பி. சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

Similar News

News September 14, 2025

சென்னையில் அன்புக்கரங்கள் திட்டம் நாளை தொடக்கம்

image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் ’அன்புக்கரங்கள் திட்டம் பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி, உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.

News September 14, 2025

சென்னை மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News September 14, 2025

BREAKING: சென்னைக்குள் நுழைய 5 ரவுடிகளுக்கு தடை

image

சென்னை கமிஷனர் அருணின் உத்தரவின்படி, திருவல்லிக்கேணி எடிஜிபி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 5 ரவுடிகளை அடையாளம் கண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 A-ன் கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அஜய் ரோகன், நாகேந்திர சேதுபதி, பிரேம்குமார், ராஜா, செல்வபாரதி ஆகியோர் அடுத்த ஓராண்டுக்கு சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் எந்த காரணத்திற்கும் நுழை கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!