News September 23, 2024

சைகை மொழி பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

*செய்+கை = செய்கை. அந்த அசைவு மொழியே சைகை மொழியாக மாறியது. *சைகை மொழி என்பது வெறும் கைகளால் மட்டுமல்ல; முகம் & வடிவ பாவனை, உடல் அசைவு மூலமாகவும் சைகை மொழி பேசப்படுகிறது. *இம்மொழிக்கும் இலக்கணம் உண்டு. *சரியான செய்கையும், இமை & உடல் அசைவுமே கேள்விக்கும் பதிலுக்குமான வேற்றுமையை புரிய வைக்கும். *உலகில் 7 கோடி மாற்றுத்திறனாளிகள் (காது கேளா & வாய் பேசா) இம்மொழியை பேசுகின்றனர்.

Similar News

News August 23, 2025

ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

image

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 23, 2025

உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

image

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.

News August 23, 2025

வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்!

image

கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும் அல்லவா. அது போலதான் நமது வாழ்வும். சின்ன சின்ன விஷயங்களின் காரணமாக கவனம் சிதறினால், செய்ய நினைக்கும் வேலையில் முழு கவனம் கிடைக்காது. இந்த கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க, சிம்பிள் டிரிகஸ் ஒன்னு இருக்கு! வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்.. வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும்.

error: Content is protected !!