News January 9, 2026
சேலம்: IOCL நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.<
Similar News
News January 11, 2026
சேலம்: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

சேலம் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்
https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
ஆத்தூர் அருகே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

தம்மம்பட்டியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் தனது தந்தை சுரேஷ் (47) என்பவருடன் சென்று மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், 17 வயது மாணவன் மற்றும் அவரது தந்தை சுரேஷ் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


