News August 14, 2025
சேலம் GH-2ல் போதையால் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதை பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதந்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சுமார் 760 பேர் பயன்பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 50 முதல் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Similar News
News August 16, 2025
சேலத்தில் உதவித்தொகை வேண்டுமா? APPLY NOW

சேலம் மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.
News August 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News August 15, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.