News October 25, 2025
சேலம் GH-ல் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை!

புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 10 லட்சம் முதல் 11 லட்சம் வரை செலவாகும் நிலையில், இந்தச் சுமையைத் தமிழக மக்கள் மீது சுமத்தாமல் இருக்க, இச்சிகிச்சைக்கான முழுச் செலவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ், சேலம் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 25, 2025
சேலம் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

சேலம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News October 25, 2025
JUST IN: மேட்டூர் தொழிற்சாலையில் வெடி விபத்து!

மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியில் ரசாயனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்களான ராகேஷ், சல்மான் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும், பலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.


