News December 19, 2025
சேலம் GHல் குறித்து அண்ணாமலை குற்றச்சாட்டு!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக பாஜக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள GH நிர்வாகம் தினமும் 5.56 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 21 போர் வெல்கள், 64 RO குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.மேலும் மாநகராட்சியிலிருந்து தினமும் 3.70 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
ஓமலூர் அருகே உடல் நசுங்கி பலி!

ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் சேலம், தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் அடியில் உள்ள சாலையோரத்தில் நேற்று, தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள், 67. படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பெருமாள் மீது ஏறியது. இதில் உடல் நசங்கி பெருமாள் உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். எனவே, பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் அல்லது voters.eci.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
ஆத்தூர் அருகே துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்லதுரை (42). பெயிண்ட் தொழிலாளியான இவர் நேற்று தாண்டவராயபுரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஏறி முருங்கை கீரை பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஒயர் மீது மோதியதில், மின்சாரம் பாய்ந்து செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


