News October 19, 2025

சேலம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 21, 2025

சேலம்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க

News October 21, 2025

சேலத்தில் விபத்து:தாய்மாமனுடன் மருமகன் பலி!

image

சேலம் சின்ன சீரகாபாடியை சேர்ந்த ராம்குமார் (25). கடந்த 19ம் தேதி தனது சகோதரி மகன் பவித்ரன் (6),மகள் புகழினி (7) ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் செல்லும் போது எதிரே வந்த பைக், நேருக்கு நேராக மோதியது. இதில் பவித்ரன் உயிரிழந்தநிலையில், ராம்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகழினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை!

News October 21, 2025

சேலத்தில் பட்டாசு வெடித்து 10 பேர் காயம்!

image

மேட்டூர் அருகே பாம்பம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டபானி மகன் மகிலன் (9). இவர் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வீட்டின் முன் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கண்ணில்பட்டு காயம் ஏற்பட்டது. அலறிய சிறுவனை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதே போல பெரமனுார், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

error: Content is protected !!