News September 14, 2025

சேலம்: 8 மாதங்களில் 2,104 பேருக்கு நாய்க்கடி!

image

சேலம்: ஆத்துார்,தலைவாசல்,கெங்கவல்லி,எடப்பாடி,மேட்டூர்,ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 8 மாதங்களில் மட்டும் 2,104 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்களே , தெரு நாய்கள் தொந்தரவு இருந்தால் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 14, 2025

சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 14, 2025

சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

image

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!