News February 21, 2025
சேலம்: 400 லஞ்சம் வாங்கிய 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

தர்மபுரி சிறையில் தர்மபுரி கிருஷ்ணகிரி குற்ற வழக்குகளில் உள்ளூர் கைது செய்து அடைக்கப்படுவர் 150 கைதிகள் உள்ளனர். கைதிகளை பார்க்க வருபவரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் விசாரணையில் இரண்டு சேலை வார்டன்கள் 400 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. சேலம் மாவட்ட சிறை எஸ்பி வினோத் விசாரணை நடத்தி சௌந்தர்ராஜன் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News July 6, 2025
சேலம் மாநகர காவல்துறை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 6, 2025
தடகளத்தில் தங்கம் வென்ற சேலம் காவலர்!

அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
News July 6, 2025
சேலத்தில் நாட்டுப்புற கலைகளுக்கு இலவச பயிற்சி!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007 தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!