News October 22, 2025

சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

image

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News April 8, 2026

சேலத்தில் சோகம்: தவறி விழுந்தவர் பலி

image

சேலம், மன்னார்பாளையத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (44) என்ற மதுப் பிரியர், நேற்று காலை போதையில் மாடிப்படியிலிருந்து இறங்கும்போது கால் தவறி உருண்டு விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுப்பழக்கத்தால் நேரிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2026

சேலம் மக்களே உஷார்!

image

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் முதன்முறையாக வெயில் சதமடித்துள்ளது. இதனால் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மக்களே, வெயிலின் தாக்கம் மேலும் கூடும் என்பதால், நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். (ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

image

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!