News March 18, 2024
சேலம்: 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வர். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News August 12, 2025
சேலத்தில் தொழில் தொடங்க SUPER வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரம், சேலம் என்ற முகவரியில் ஆக.18 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News August 12, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆக.13, 27, செப்.03 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், ஆக.14, 28, செப்.04 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பெங்களூருவுக்கும் சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் (06547/06548) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News August 12, 2025
நாய் கடியில் சேலம் முதலிடம்! உடனே CALL பண்ணுங்க!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!