News August 17, 2025

சேலம்: 10th தகுதிக்கு சூப்பர் அரசு வேலை APPLY NOW !

image

சேலம் மக்களே புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து இணையம் மூலமாக ஆக.17 இன்று இரவு 11.59 PMக்குள் விண்ணப்பிக்க வேண்டும். யாருக்காவது உதவும் உடனே ஷேர் செய்யுங்கள்!

Similar News

News August 17, 2025

சேலம்: கூட்டணி குழப்பம் தேவை இல்லை; வேல்முருகன் விளக்கம்

image

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., “தி.மு.க. கூட்டணி கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி கோரிக்கை விடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பற்றியும் தலைவர்கள் பேசவில்லை. சில இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆசையை வெளியிடுகிறார்கள். ஆனால், அது கூட்டணி தலைவர்கள் கருத்தாகவே இல்லையென” தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

சேலம் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விளக்குகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று கொள்ள வேண்டும், மஞ்சள் விளக்கு எரிந்தால் காத்திருக்க வேண்டும், பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை கடைபிடிப்பதன் மூலம் உயிரையும், பிறர் உயிரையும் பாதுகாக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 17, 2025

சேலம்: 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயம்!

image

சேலம் அம்மாப்பேட்டையில் 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோரும், டியூசன் டீச்சரின் பெற்றோரும் அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எங்கே போனார்கள்? சென்னை சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!