News June 17, 2024
சேலம்: ஹார்டுவேர் கடையில் ரூ.7.50 லட்சம் திருட்டு

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சோதாராம். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். இவர் தற்போது வசிக்கும் தெருவில் ஹார்டுவேர் பெயின்ட் கடை வைத்துள்ளார். நேற்று(ஜூன் 16) மதியம் 1 மணிக்கு ஹெல்மெட் எடுக்க கடையை திறந்தபோது, கடையின் மேற்கூரை வழியே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7.50 லட்சத்தை திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 8, 2026
சேலம் மக்களே உஷார்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் முதன்முறையாக வெயில் சதமடித்துள்ளது. இதனால் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மக்களே, வெயிலின் தாக்கம் மேலும் கூடும் என்பதால், நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். (ஷேர் பண்ணுங்க)
News April 7, 2026
கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.