News October 8, 2025

சேலம்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

சேலம் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News November 9, 2025

சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

image

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 9, 2025

இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

image

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News November 9, 2025

சேலம் வழியாக கொல்லம் சிறப்பு ரெயில் இயக்கம்!

image

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

error: Content is protected !!