News December 27, 2025

சேலம்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இதனை வீடுகட்ட போகும் உங்கள் நண்பருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

சேலம்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

image

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

News December 28, 2025

வாழப்பாடியில் வசமாக சிக்கிய ஆசிரியர்கள்!

image

வாழப்பாடி: பேளூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற 17 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஜெகதீசன் மற்றும் தினகரன் ஆகியோர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 28, 2025

சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

error: Content is protected !!