News October 16, 2025

சேலம்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

சேலம் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>இந்த<<>> இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 16, 2025

கொளத்தூர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டையூர் பரிசல்துறை அருகே, அடையாளம் தெரியாத நிலையில் தோல் உரிந்த ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வயதாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த ஆண் சடலத்தை, காவல்துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

News October 16, 2025

சேலம்: சித்தப்பாவை கொன்ற மகன் கைது!

image

சேலம்: கொங்கணாபுரம், மட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன் குப்புசாமி குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த குப்புசாமி, கத்தியால் முத்துசாமியை குத்திவிட்டு தப்பியோடினார். இதில் முத்துசாமி உயிரிழந்தார். இதில், கொங்கணாபுரம் போலீசார் குப்புசாமி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.

News October 16, 2025

சேலம் மாவட்டத்திற்கு புதிய மாஸ்டர் பிளான்!

image

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, யாரும் எதிர்பாராத வகையில், பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் அதிக மழை பெய்வதால், திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. இந்நிலையில் திடீர் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு, புதிய ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!