News October 28, 2025
சேலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 29, 2025
சேலத்தில் மாமியார் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஞானஅரசன் (33). இவர் கடந்த 2023 ஆண்டு மே.23 அன்று பிரிந்து சென்ற மனைவியைத் திரும்ப அனுப்பக் கோரி, மாமியார் மற்றும் மனைவியின் இரண்டு சகோதரிகளை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பான வழக்கில், ஞான அரசனுக்கு சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 900 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
News October 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 28, 2025
பருவமழைக்கு மாநகராட்சியில் 60 கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் கண்காணிக்க 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


