News June 26, 2024
சேலம்: விருது பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று(ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2026
சேலம்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 1, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 1, 2026
சேலம் அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த சௌந்தரராஜன் (27), இன்று அயோத்தியாபட்டணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுக்கம்பட்டி மயானம் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


