News October 14, 2025

சேலம் -விமானம் சேவை 26ம் தேதி முதல் நேரம் மாற்றம்

image

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான சேவையும், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர் விமான சேவையும் உள்ளது. விமானங்களின் இயக்க நேரம் வரும் 26ம் தேதி முதல் குளிர்காலத்திற்கான இயக்க நேரமாக மாற்றி அமைப்பதாக சேலம் விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 26ம் தேதி முதல் சேலத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும்.

Similar News

News October 14, 2025

சேலம்: தந்தை கண்முன்னே குழந்தை பலி

image

சேலம், குரங்குச்சாவடி அருகே நேற்று அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஜனாஸ்ரீ (4 வயது) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்து கால்கள் உடைந்த நிலையில், சிறுமியின் தந்தை தங்கராஜ், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் விபத்து குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2025

சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News October 14, 2025

சேலம்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!