News December 28, 2025

சேலம்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

image

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News January 1, 2026

சேலம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

JUST IN: ஆத்துார் பெண் சம்பவ இடத்திலேயே பலி!

image

ஆத்துார் மல்லியக்கரையை சேர்ந்த மஞ்சுளா (45) வாய் பேச முடியாதவர். இந்தநிலையில் மஞ்சுளா தனது உறவினர்களுடன் நேற்று நள்ளிரவு மேட்டூர் சாலையில் ஆட்டோ சென்றுக்கொண்டு இருக்கும் போது எதிர்பாரதவிதமாக தனியார் ஆம்னி பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

சேலத்தில் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<> pmay-urban.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!