News December 19, 2024
சேலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்

ஜன.04 முதல் ஜூன் 28 வரை சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், ஜன.05 முதல் ஜூன் 29 வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் (07355/ 07356) இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Similar News
News March 3, 2026
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரை நகர போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் மணக்காட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கர் (52) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதற்காக இந்தக் கொலை முயற்சி நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

சேலம் 4 ரோடு சாமுண்டி வளாகத்தில் நாளை மார்ச் 04 முதல் 13 வரை தங்க நகை மதிப்பீட் டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கடன் தொகை வழங்கும் முறை, ‘ஹால்மார்க்’ தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.பயிற்சி முடித் தவர்கள் கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.விவரங்களுக்கு: 94437 28438
News March 3, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


