News April 28, 2025
சேலம் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில்

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
Similar News
News September 15, 2025
சேலம்: பயன்பாட்டிற்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்?

சேலம் கோட்டத்திற்கு முதற்கட்டமாக 16 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்து சேவைகளின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எண்-1 பேருந்து சேலம் மாநகரத்தில் பயணிக்க உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் அயோத்தியாபட்டணம் வரை இயக்கப்படும், இப்பேருந்து 3 பைபாஸ் வழியாக இயக்கப்படும்.
News September 15, 2025
சேலம்: போதை மாத்திரை – மாணவன் உட்பட 5 பேர் கைது!

எடப்பாடி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது என எடப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் லாட்ஜில் அந்த கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ராஜசேகர், ஜீவா, சுரேஷ்குமார், சசிகுமார், மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
News September 15, 2025
சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம் மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு செப்.16 மற்றும் 17 மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது