News January 10, 2025
சேலம் வழியாக பொங்கல் சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.11ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், ஜன.12ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06067/06068) இயக்கப்படுகின்றன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சேலத்தில் இருந்து ஜெருசலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியகிறிஸ்தவர்களுக்கான மானிய தொகை நேரடியாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 28-02-2026ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News November 14, 2025
சேலம்: அரசு தேர்வுக்கு சிறப்பு பேருந்துகள் ஆட்சியர்!

சேலம் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, மற்றும் வாழப்பாடி ஆகிய பகுதிகளில் வருகின்ற நவ.16ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
சேலம்: பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறிஞர் அண்ணா பிறந்தநாள் ஒட்டி நவம்பர்-19ஆம் தேதி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளதாகவும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கு பெற்று சான்றிதலுடன் பரிசு தொகையையும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


