News October 24, 2024
சேலம் வழியாக பீகாருக்கு சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.26, நவ.2,9,16 தேதிகளில் கோவையில் இருந்து பீகார் மாநிலம் பாராவுனிக்கும், மறுமார்க்கத்தில், அக்.29, நவ.5,12,19 தேதிகளில் பாராவுனியில் கோவைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு ரயில் திருப்பூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
சேலம் மாவட்டத்திற்கு புதிய மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, யாரும் எதிர்பாராத வகையில், பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் அதிக மழை பெய்வதால், திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. இந்நிலையில் திடீர் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு, புதிய ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 16, 2025
சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஜவுளிக்கடையில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கடைவீதி, சின்னக்கடைவீதி, முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், புதிய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, சூரமங்கலம், அழகாபுரம், குகை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் இன்று வியாபாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
News October 16, 2025
மேட்டூரில் பெயிண்டர் படுகொலை!

சேலம்: மேட்டூர் கேம்ப் பாரதி நகரில் வசிக்கும் பெயிண்டர் மணிகண்டன் (27). வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில், வீட்டின் அருகே தலை, உடலில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனுக்கு மனைவியும், 3 வயது குழந்தையும் உள்ளனர்.