News October 23, 2024
சேலம் வழியாக தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.04- ம் தேதி கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும், நவ.05- ம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் ரயில் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
சேலம்: கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு
சேலம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கிராம கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.
News November 20, 2024
ரேஷன் அரிசியை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்துபவர்களை, தமிழக அரசு இரும்புகரம் கொண்டு அடக்கி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் பொதுமக்களும், தாங்கள் நியாய விலை கடையில் வாங்கும் அரிசியை விற்பனை செய்யாமல், தங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
News November 19, 2024
சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.