News December 5, 2024
சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக சம்பல்பூர்- ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (08311/08312) வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.11,28,25, ஜன.01,08,15,22,29, பிப்.05,12,19,26, மார்ச் 05 ஆகிய தேதிகளில் சம்பல்பூரில் இருந்தும், டிச.13,20,27, ஜன.03,10,17,24,31, பிப்.07,14,21,28, மார்ச்.07 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Similar News
News August 30, 2025
சேலம் மாவட்டம் உருவான கதை!

இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. தற்போது தனித்தனி மாவட்டங்களாக உள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 7,530 சதுர கி.மீ கொண்ட பகுதியாக சேலம் மாவட்டம் இருந்தது.தமிழ்நாட்டிற்கு மூன்று முதலமைச்சர்கள் தந்த மாவட்டம். “மாங்கனி மாநகரம்”, “ஸ்டீல் சிட்டி” என்ற பல்வேறு பெயர்களை கொண்டது.SHARE!
News August 30, 2025
சேலம்: பெங்களூரு- மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆக.31- ம் தேதி மங்களூரு சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில் செப்.01- ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News August 30, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் ஆகஸ்ட்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் பழைய பேருந்து நிலையம்.
▶️ஆவணிப் பேரூர் கிழக்க நடராஜர் திருமண மண்டபம்எடப்பாடி.
▶️இடங்கண சாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம்.
▶️ஏத்தாப்பூர் வார சந்தை திலகர் ஏத்தாப்பூர்.
▶️ஓமலூர் பாகல்பட்டி அருண் மகள் பாகல்பட்டி.
▶️அயோத்தியாபட்டினம் சேலம் இன்ஜினியரிங்காலேஜ் எம் பெருமாள் பாளையம்.