News November 20, 2024

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் மாற்றம்

image

பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக, சேலம் வழியாக செல்லும் சில ரயில்கள் இன்று (நவ.20) மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. பாலக்காடு- சென்னை சென்ட்ரல் ரயில் (22652) சென்னை கடற்கரை வரையிலும், ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22650) பெரம்பூர் வரையிலும், ஆழப்புலா-சென்னை சென்ட்ரல் ரயில் (22640) ஆவடி வரை இயக்கப்படும்.

Similar News

News August 29, 2025

சேலத்தில் ரூ.10,477.98 கோடி கடனுதவிகள் கலெக்டர் தகவல்!

image

ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இவ்வங்கிகள் மூலம் வேளாண்மை திட்டங்கள் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள் என ரூ.5,461.61 கோடி கடனுதவிகளும், சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,574.25 கோடி கடனுதவிகளும்,மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.74 கோடி கல்விக்கடன்களும் என மொத்தம் ரூ.10,477.98 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

சேலம்: சிறப்பு ரயில்கள் நவம்பர் வரை நீட்டிப்பு

image

சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர் பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் (06085), பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06086) வரும் நவம்பர் மாத இறுதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

குறைகளை தீர்த்திட மனுக்களை வழங்க தயாராகுங்கள்!

image

சேலம் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை வீடு தேடி அரசு முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அம்மாபேட்டை மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம
▶️புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி.எண் கட்டிடம் வினோபாஜி நகர்
▶️ தாரமங்கலம் தாரமங்கலம் சமுதாயக்கூடம் ▶️வீரகனூர் சிவன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் ▶️காடையாம்பட்டி மீனாட்சி திருமண மண்டபம் மரக்கவுண்டன் புதூர் ▶️கொளத்தூர் விபிஆர்சி கட்டிடம் சத்யா நகர்!

error: Content is protected !!